முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை. இதனால் ஜன. 4 ல் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 419 கன அடியாக இருந்தது. அதன் பிறகு பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக, வியாழக்கிழமை அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1385 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1054 கன அடியாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை அணை நிலவரம், 120.55 அடி உயரமாகவும், நீர் இருப்பு 2,737 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து 1,064 கனஅடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 700 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் 700 கனஅடி தண்ணீர் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், உள்ள இரண்டு மின்னாக்கிகள் மூலம் தலா, 41, 29 மெகாவாட் என 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.