லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் புலி, கரடி விலங்குகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் புலி, கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் புலி, கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், லோயர் கேம்ப் குமுளி மலைப்பாதை மேகமலை வன உயிரினச்சரணாலயப்பகுதியில் உள்ளது. இதனையொட்டி அருகே தேக்கடி பெரியாறு புலிகள் வனச்சரணாலயம் உள்ளது. பொதுமுடக்க காலத்தில் லோயர்கேம்ப் மலைப்பதையில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியில்லை.
இதனால் மலைச்சாலையில் வன விலங்குகளான, புலி, சிறுத்தைப்புலி, கரடி, மிளாமான்கள் தாராளமாக நடமாடின. இதற்கிடையில் தேசிய நொடுஞ்சாலை ஆணையகம் இந்த இடைப்பட்ட காலத்தில் மலைச்சாலை பணிகளை முடித்து, ஜன 6 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கியது.
Advertisement
Advertisement
இதற்கிடையில் கூடலூர், லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த பால் உள்ளிட்ட வியாபாரிகள் காலை நேரத்தில் மலைச்சாலையில், செல்லும் போது கரடி மற்றும் புலி ஆகிய விலங்குகளை கண்டுள்ளனர். இதனால் பீதியடைந்தவர்கள் சம்மந்தப்பட்ட வனம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் காவல் மற்றும் வனத்துறையினர் மலைச்சாலை பகுதியை கண்காணிக்க கோரியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.