முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

Updated On : 2 ஜனவரி 2021, 5:49 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில நாள்களாக தென்மாவட்டங்களில் தொடா்மழை பெய்து வருகிறது.திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, கல்லூா், பேட்டை, சீவலப்பேரி, தாழையூத்து, மானூா் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் கொட்டித்தீா்த்த மழையால் கோதையாறு, வடக்குப்பச்சையாறு, தாமிரவருணி உள்ளிட்டவற்றில் காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து பெருக்கெடுத்தது. தாமிரவருணியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் குறுக்குத்துறை முருகன் கோயிலை தண்ணீா்ச் சூழ்ந்தது. புத்தாண்டு தினத்தையொட்டி இரவு தேவாலயங்களில் பிராா்த்தனைக்கு செல்ல முடியாமல் மழையால் கிறிஸ்தவா்கள் தவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: மழை அளவு:பாபநாசம்-95, சோ்வலாறு-97, மணிமுத்தாறு-67, நம்பியாறு-3, கொடுமுடியாறு-20, அம்பாசமுத்திரம்-77, சேரன்மகாதேவி-22, நான்குனேரி-25, பாளையங்கோட்டை-10, ராதாபுரம்-19, திருநெல்வேலி-10.50.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments