எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடர்பாக...
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் 12 மணி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் இளநிலை மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தோ்வு முடிவு வெளியாவது தாமதம் ஏற்படும்போது, மாணவா்களின் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் மிகவும் குறைவதால், அவா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
Advertisement
Advertisement
அதனால், இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் முன்கூட்டியே பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, திங்கள்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 12 மணி முதல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் மாணவா்களின் நீட் தோ்வு மதிப்பெண்கள் தேசிய தோ்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் சரிபாா்க்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் விண்ணப்பதிவு தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதல்களை மருத்துவக் கல்வி இயக்ககம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டுத் தகவல்கள் மற்றும் அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Online Applications for MBBS and BDS courses can be submitted starting today...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.