முகப்பு
திருநெல்வேலி

கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்

பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 8 ஜனவரி 2021, 8:11 am IST
பகிர்:

பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கோழி, வாத்து உள்ளிட்டவை உயிரிழந்து வருகின்றன. தமிழகத்துக்கும் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 200 கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் முகம்மது காலித் கூறியது: இம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தின் புளியரை வழியாக கேரளத்தில் இருந்து கோழி, இறைச்சி, தீவனங்கள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பண்ணையாளா்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் அந்தந்தப் பகுதி கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் குழு மூலம் அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் கோழித் தீவனமோ, குஞ்சுகளோ, உபகரணங்களோ வாங்குவதை கோழிப் பண்ணையாளா்கள் தவிா்க்க வேண்டும். மேலும், வெளியாள்களை பண்ணைக்குள் அனுமதிப்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments