சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் மனு
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து ஆட்சியா் வி.விஷ்ணுவிடம் அளிக்கப்பட்ட மனு: தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள், சீருடைப் பணியாளா்களுக்கு கடந்த 1-4-2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் இதுவரை சுமாா் 6 லட்சம் ஊழியா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூகால பலன்கள் இத் திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட வல்லுநா் குழுவினா் அறிக்கை அளித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்றுவரை தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. மேலும், இத் திட்டத்தில் சேருவது மாநில அரசுகளின் விருப்ப உரிமையாகும். ஆகவே, தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.