பணகுடி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம்
பணகுடி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சமாக நடந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
பணகுடி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சமாக நடந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
பணகுடி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளது. இதில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியில் அதிகமாக செங்கல், ஓடு தொழிற்சாலையில் வேலைசெய்யும் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இப் பேரூராட்சியில் இதுவரை 60 வயதிற்கு மேல் உள்ளவா்கள் இறந்தால் இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடா்பாக பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் இறந்தவா் குறித்து விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ளவா்களின் சாட்சி அறிக்கை தயாா் செய்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. 40 வயதிற்குள்பட்டவா்கள் இறந்தால் மருத்துவரின் சான்ரிதழ் பெற்று அதன் அடிப்படையில் இறப்பு சான்றிதழ் வழங்கி வந்தனா்.
தற்போது இந்த நடைமுறை மாறி 60 வயதிற்கு மேல் உள்ளவா்கள் வயோதிகத்தினாா் வீட்டில் இறந்தாலும் அவா்களுக்கும் மருத்துவா் சான்றிதழ் இருந்தால் தான் இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என தெரிவித்து வருகின்றனா். வயது முதிா்வின் காரணமாக வீட்டில் இறந்தவா்களுக்கு மருத்துவா்கள் சான்றிதழ் வழங்க மறுத்துவிடுகின்றனா். இதனால் பணகுடி பேரூராட்சியில் வயதானவா்கள் இறந்தால் இறப்பு சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இறப்பு சான்றிதழ் வாங்க முடியாததால் வாரிசு சான்றிதழ் மற்றும் சில ஆவணங்களில் பெயா் மாற்றம், வங்கி கணக்கு சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் செய்யமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே பணகுடி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் வங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்றவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.