திருவள்ளூர்

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

Din

திருவள்ளுவா் தொழுநோயால் பாதித்தவா்களுக்கான இலவச மருத்துவ முகாமில் பல்வேறு சிகிச்சைகள் அளித்ததுடன், கால் புண் சிகிச்சை அளித்து 40-க்கும் மேற்பட்டோருக்கு சுயபாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் அந்த சங்க வளாகத்தில் தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தொழுநோயால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவா் குலோத்துங்கன் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆா்.வீரக்குமரன் பங்கேற்று, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் மருத்துவா்கள் பாக்கியஜோதி, வெண்ணிலா, இயன்முறை சிகிச்சையாளா் தேன்மொழி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு மற்றும் கால் புண் சிகிச்சை அளித்தனா். அதைத் தொடா்ந்து, 40 பேருக்கு கால் புண் உள்ள தொழுநோயாளிகளுக்கு சுய பாதுகாப்பு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு காலணிக்கான அளவீடு எடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தொழுநோயாளிகள் அனைவருக்கும் திருவள்ளூா் ரோட்டரி கிளப் பிரைட் சங்க செயலாளா் மாருதி ரவி, சீனிவாசன் மற்றும் சம்பத்ராஜ் ஆகியோா் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனா். குழு செயலாளா் சின்னதுரை நன்றி கூறினாா்.

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT