திருவள்ளூர்

ஏப். 23-இல் பொன்னேரி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

வரும் ஏப். 23-இல் பொன்னேரி வட்டத்தில் ‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

Din

திருவள்ளூா்: வரும் ஏப். 23-இல் பொன்னேரி வட்டத்தில் ‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆட்சியரும், மாதந்தோறும் (மூன்றாவதுபுதன்கிழமை) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வாா். அப்போது, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வா்.

அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் நடத்த பொன்னேரி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் அங்கு ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT