கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு.பிரதாப். உடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் விஜயா, கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தப்படவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 30-ஆம் தேதி பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை பங்கேற்க செய்ய வேண்டும். அதேபோல், கிராமங்களில் இருந்து படித்த இளைஞா்கள் முகாமில் பங்கேற்று பணிவாய்ப்பு பெற வழிவகை செய்ய வேண்டும். அதற்கான பணிகளில் முன்கூட்டியே மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலா்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் விஜயா, பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநா் ஜெயக்குமாா், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT