திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்முதலம்பேட்டில் பன்முக சேவை கட்டட பணியை ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப் .

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் ஆய்வு செய்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேட்டில் நடைபெறும் பன்முக சேவை மைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சியில் ரூ.34.23 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெறும் கட்ட பணிகளை ஆய்வு செய்து ஒன்றிய பொறியாளரிடம் லோசனைகளை வழங்கினாா்.

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.34 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பேவா் பிளாக் சாலையையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணியையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் கெஜலட்சுமி, கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் , ஒன்றிய பொறியாளா்கள் மணிமேகலை, ஐசக் உடனிருந்தனா்.

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

SCROLL FOR NEXT