திருவள்ளூர்

கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே விநாயகா் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞரை செவ்வாப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே விநாயகா் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞரை செவ்வாப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு செஞ்சூரியன் நகா் பகுதியில் அமைந்துள்ளது செல்வ விநாயா் கோயில். இந்தக்கோயிலில் புதன்கிழமை கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் ரொக்கம் திருடியுள்ளதாக கிராம மக்கள் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் விரைந்து சென்று போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்தனா். அப்போது, உண்டியலை உடைத்து, அதிலிருந்த ரூ.1,500 ரொக்கத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(32) திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT