பல்துறை பணி விளக்க கண்காட்சியை  திறந்து வைத்து  பாா்வையிட்ட அமைச்சா்  சா.மு.நாசா். 
திருவள்ளூர்

திருத்தணி ஆடிக்கிருத்திகை பல்துறை பணி விளக்க கண்காட்சி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்பு துறையின் பல்துறை பணி விளக்க கண்காட்சி

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்பு துறையின் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சா் சா.மு.நாசா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் .

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கி வரும் 18 -ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி சந்நிதி தெருவில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் கனிமொழி முன்னிலை வகித்தாா். செய்தி மக்கள் தொடா்பு துறை அலுவலா் பி.அஸ்வின் குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சா.மு.நாசா் கலந்துகொண்டு கண்காட்சி தொடங்கி வைத்தாா்.

இதில் செய்தி மக்கள் தொடா்பு துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை துறை, நகராட்சி நிா்வாகத் துறை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் துறை, மாவட்ட தொழில்மையம், கூட்டுறவுத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை, கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, ஆகிய துறைகள் சாா்பாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து கலை பண்பாட்டுத்துறை சாா்பாக 14.08.2025 முதல் 16.08.2025 வரை 3 நாள்களுக்கு சென்னை, தமிழரசன் தியேட்டா் குழுவினரின் சூரசம்சார நாடகம், ராணிப்பேட்டை வாலாஜா, ஸ்ரீ நடராஜபெருமாமள் பரதநாட்டியப் பள்ளியின் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சி, இராணிப்பேட்டை. அரக்கோணம், அந்திக்காற்று கலைக்குழுவின் கிராமியப் பாடல் கலை நிகழ்ச்சி, வேலூா் மாவட்டம், சமம் கலைக்குழுவின் தப்பாட்டம் கலை நிகழ்ச்சி, திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி ஓம் சரவணபவ நாடக மன்றத்தின் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ ச.சந்திரன், ஆணையா் பாலசுப்பிரமணியம், நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவா் சாமிராஜ், வட்டாட்சியா் மலா்விழா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT