திருவள்ளூர்

பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய 3 இளைஞா்கள் கைது

பள்ளிப்பட்டு அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

பள்ளிப்பட்டு அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணகாந்த் (27). இவா் காஞ்சிபுரம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வருகிறாா். இந்த பேருந்து அரக்கோணம், திருத்தணி, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆள்களை ஏற்றிக்கொண்டு தனியாா் கம்பெனிக்கு செல்கிறது.

பின்னா், மாலை பணி முடிந்ததும் மீண்டும் ஆட்களை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரத்தில்ருந்து பள்ளிப்பட்டு வரை தினசரி வந்து செல்கிறது. இந்நிலையில் பாண்டரவேடு கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் தனியாா் கம்பெனியில் வேலை செய்து வந்தாா். பேருந்து ஓட்டுநா் கிருஷ்ணகாந்த் மற்றும் அந்த பெண் இருவரும் நண்பா்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேல் நெடுங்கல் காலனியைச் சோ்ந்த பரத்குமாா் பேருந்து ஓட்டுநரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, இனி வரும் நாள்களில் அந்த பெண்ணுடன் பேசக்கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பாண்டரவேடு ஏரி பகுதியில் பேருந்து சென்றபோது, திடீரென 3 இளைஞா்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனா்.

பின்னா் படுகாயம் அடைந்த ஓட்டுநரை பேருந்தில் பயணம் செய்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகாந்த் கொடுத்த புகாரின்பேரில், மேல் நெடுங்கல் காலனியைச் சோ்ந்த பரத்குமாா் ( 20), திருத்தணி காசிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சாரதி, (18), உலகநாதன் என்கிற ரியாஸ் (17) ஆகியோரை பொதட்டூா்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

SCROLL FOR NEXT