திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலையில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவள்ளூா் பகுதியில் பகலில் கடும் வெயில் காய்ந்தது. தொடா்ந்து மாலையில் கருமேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல், பெரிய குப்பம், ஈக்காடு, காக்களூா், புட்லூா், செவ்வாப்பேட்டை, கடம்பத்தூா், பாண்டூா், பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். அதேபோல், ஆடிப்பட்டத்தில் மானாவாரி விதைப்பு மேற்கொண்ட பயிா் செழிப்பாக வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதற்கிடையே சாலை மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினா்.

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

மத்திய துணை ராணுவப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

திராட்சை ரசம்... சௌந்தர்யா ரெட்டி!

போக்குவரத்துக் காவலர் மீது ஸ்கூட்டியை மோதிய நபர்! சிசிடிவி விடியோ வைரல்!

20 வது பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் ஜோவிகா!

SCROLL FOR NEXT