திருவள்ளூா் நகராட்சியில் 9 மற்றும் 12 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்கள் பட்டா பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்பட 617 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் துறைசாா்ந்த அலுவலா்களிடத்தில் எடுத்துரைத்தாா்.
அதைத் தொடா்ந்து, உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்த மனுக்களுக்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு அவா் வழங்கினாா்.
இதில், வட்டாட்சியா் ரஜினிகாந்த், ஆணையா் தாமோதரன், சுகாதார அலுவலா் மோகன், நகர செயலாளா் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி, நகராட்சி முன்னாள் தலைவா் பொன்.பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா்கள் த.அயூப்அலி, தாமஸ் என்ற ராஜ்குமாா், கு.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.