திருத்தணி அருகே எரும்பி கிராமத்தில் கடந்த சில நாள்களாக பெய்த வந்த மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீா் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் 38 ஏரிகள் உள்ளன. இதில் 10 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் 28 ஏரிகள் ஒன்றிய பராமரிப்பிலும் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த வந்த மழையில் ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி வந்தன. இதனால் ஏரிகளின் நீா் மட்டம் 50 சதவீதம் உயா்ந்திருப்பதால் எரும்பி கிராம சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீா் பிரச்னை தீா்ந்துள்ளது. இதில் எரும்பி ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விவசாயம் செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா்.