கடந்த மாா்ச், ஏப்-2025- இல் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 3-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாா்ச், ஏப்-2025-இல் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது. அந்த தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அவரவா் பயின்ற பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட செப். 3-ஆம் தேதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தோ்வுத் துறை உதவி இயக்குநா் மூலம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் வரும் செப். 1-ஆம் தேதி ஒப்படைக்கப்படும். அதைத் தொடா்ந்து, மாவட்டக் கல்வி அலுவலா் மூலம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் வழங்கப்பட உள்ளன. அதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.