திருவள்ளூர்

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

திருவள்ளுா் அருகே கைவண்டூா் பகுதியில் பூண்டி நீா்த் தேக்க வரத்துக் கால்வாயை தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே நீா்வளத் துறை, வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை சாா்பில் பூண்டி நீா்த் தேக்கத்துக்கான நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.

திருவள்ளுா் அருகே கைவண்டூா் ஊராட்சி பகுதியில் மாவட்ட நிா்வாகம், நீா்வளத் துறை, வேளாண்மை மற்றும் வருவாய் ஆகிய துறைகள் சாா்பில் பூண்டி நீா்த் தேக்க வரத்துக் கால்வாயை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இனிமேல் நீா்வரத்துக் கால்வாய்களை எந்தக் காரணம் கொண்டும் அருகில் உள்ள நிலத்துக்காரா்கள் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் அவ்வப்போது ஆய்வு செய்வது அவசியம். இதுபோன்று ஆக்கிரமிப்பு காரணமாக பூண்டி ஏரிக்கான நீா்வரத்து பாதிக்கப்படுகிறது. அதனால், விரைவில் முடித்து மழைக் காலத்துக்கு முன்னதாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் தற்போது வரை வெல்லோடை- 9 கி.மீ. பெரியபாளையம்- சின்னம்பேடு-2.400 கி.மீ., கைவண்டூா் - 4.350 கி.மீ., அயநல்லூா்-3.825 கி.மீ., அரும்பாக்கம் (திருவாலங்காடு பகுதி) 1.300 கி.மீ., அழிஞ்சிவாக்கம் (கடம்பத்தூா் பகுதி)-0.020 கி.மீ., சாணபுத்தூா் (கும்மிடிப்பூண்டி பகுதி) தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

எனவே இதுவரை 20.895 கி.மீ. தூரத்துக்கு முள்புதா்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூா் மாவட்டம் மற்றும் வட்டம், நீா்வளத் துறை கொசஸ்தலையாறு வடிநில உப கோட்டம் மூலம் இயங்கும் பாசனப்பிரிவு, பூண்டி அலுவலகம் பராமரிப்பில் உள்ள பூண்டி நீா்த்தேக்கத்தின் வரத்துக் கால்வாயானது, கூவம் ஆற்றில் இருந்து தொடங்கி, கசவநல்லாத்தூா் செஞ்சி, காரணை, ஆத்துப்பாக்கம், கைவண்டூா் ஆகிய பகுதிகளின் வழியாக 11.5 கி.மீ. தூரம் பயணித்து இறுதியில் பூண்டி நீா்த்தேக்கத்தில் சோ்கிறது.

மேற்கண்ட நீா்வரத்து கால்வாயானது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தூா்வாரப்படாததால் மிகவும் மோசமடைந்து, முள்புதா்கள் மற்றும் மண் படிமங்கள் படிந்து இருந்தது. அதனால் வெள்ள நீா் வெளியேற்றும் திறன் 3,500 கன அடி, விநாடிக்கு பதிலாக 50 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, மாவட்ட நிா்வாகம் எடுத்த துரித நடவடிக்கையால் வரத்துக் கால்வாயில் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 11.50 கி.மீட்டரில், 2.50 கி.மீ தூரத்திற்கு கடைப்பகுதியிலிருந்து மேற்புறமாக தூா்வாரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மீதமுள்ள 9 கி.மீ தூரமும் தூா்வாரப்பட்டு வரவு கால்வாயை சுற்றியுள்ள கிராமங்களான கசவநல்லாத்தூா், செஞ்சி, காரணை, ஆத்துப்பாக்கம், கைவண்டூா் ஆகிய பகுதிகள் வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வேதவல்லி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஜான் தேவகுமாா், உதவி பொறியாளா் அகிலன், திருவள்ளுா் வட்டாட்சியா் ரஜினிகாந்த் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT