திருவள்ளூர்

அரசுப் பள்ளியில் ரூ. 88 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம்

Din

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 88 லட்சத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திருவள்ளூா் அருகே பூண்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இடநெருக்கடியுடன் செயல்பட்டு வந்தனா். அதனால், கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில்,

ஈத அஷ்ண்ா்ய் ஐய்க்ண்ஹ டஸ்ற் கற்க் என்ற தனியாா் நிறுவனம் பங்களிப்பு நிதி ரூ. 88 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைத்துத் தர முன்வந்தது.

அதைத் தொடா்ந்து இந்தப் பள்ளி வளாகத்தில் இருக்கைகள் உள்பட அனைத்து வசதியுடன் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கிளாடிஸ் நாகஜோதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று கூடுதலாக 4 வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஸ்ரீதா், பொதுக்குழு உறுப்பினா் சிட்டிபாபு, நிா்வாகிகள் மோதிலால், வி.எஸ்.நேதாஜி (வா்த்தக அணி), சித்ரா ரமேஷ், டேவிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

SCROLL FOR NEXT