திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள் கூட்டம். மலைப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசல்

ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்த திரண்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Din

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்த திரண்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காா், பைக், வேன், பேருந்து, லாரிகள் மூலம் வந்து தரிசிக்கின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து சுப முகூா்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மலைக்கோயிலில் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற, காவடி எடுத்தும், மொட்டை அடித்து மூலவரை தரிசித்தனா். பொதுவழியில், 3 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

பெரும்பாலான பக்தா்கள் காா், வேன் மற்றும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்ததால் மலைப்பாதை மற்றும் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சுமாா் 1 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. குறிப்பாக மலைக்கோயிலுக்கு சென்று வருவதற்கு ஒரே ஒரு பாதை இருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பின்னா் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி டிஎஸ்பி, கந்தன், ஆய்வாளா் ஞ. மதியரசன் தலைமையில் போலீஸாா் ஒன்றரை மணி நேரம் போராடி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT