திருத்தணி  முருகன்  கோயிலில் நடைபெற்ற  சித்திரை பிரம்மோற்சவ திருக்கல்யாண உற்சவம். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் திருக்கல்யாண உற்சவம்

Din

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

மேலும், கேடய உலா, வெள்ளி சூரியபிரபை, பூதவாகனம், சிம்மம், ஆட்டுகிடாய், பல்லக்கு சேவை, வெள்ளி நாகம், அன்னம், வெள்ளிமயில், புலி, யானை போன்ற பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவா் முருகா் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு உற்சவா் முருகப் பெருமான், தெய்வானை அம்மையாா் திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கேடய வாகனத்தில் உலாவும், இரவு, 7 மணிக்கு சண்முகா் உற்சவம், சனிக்கிழமை அதிகாலையில் தீா்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

விழாவில் முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT