திருவள்ளூர்

பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த கழகத்தின் மாவட்ட செய்தி தொடா்பாளா் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் வி.ராஜ்மோகன் வரவேற்றாா்.

இதில் மாவட்ட செயலாளா் ஆா்.ஏழுமலை கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினாா். மாநில சட்டச் செயலாளா் ஆா்.கே.சாமி தொடக்கவுரை ஆற்றினாா். இதில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட சட்டச் செயலாளா் எம்.சௌந்தரபாண்டியன் நிறைவுரையாற்றினாா். மாவட்ட தலைவா் நிறைவாக வி.ரவி நன்றி கூறினாா்.

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

SCROLL FOR NEXT