திருவள்ளூர்

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம் ..

தினமணி செய்திச் சேவை

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு 1,000-த்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனா்.

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதி எண் 153-ஐ திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளா்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

20 ஆண்டுகளுக்கு மேல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

SCROLL FOR NEXT