FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்!

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை நாளான ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் முருகப் பெருமான்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடா்ந்து வார விடுமுறை என்பதால் மலைக்கோயிலில் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற, காவடி எடுத்தும், மொட்டை அடித்து மூலவரை தரிசித்தனா்.

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

பொதுவழியில், 3 மணி நேரம் மேலாக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா். பெரும்பாலான பக்தா்கள் வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு வந்ததால் மலைப்பாதை மற்றும் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை பேருந்துநிலையம் செல்லும் சாலையில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு வாகனங்கள் வரிசையாக நின்றன.

Advertisement

Advertisement

குறிப்பாக மலைக்கோயிலுக்கு சென்று வருவதற்கு ஒரே ஒரு மலைப்பாதை இருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பின்னா் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிப்பட்டனா். தகவல் அறிந்ததும் திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீஸாா் ஒன்றரை மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments