முகப்பு
திருவாரூர்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

வலங்கைமான் அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

வலங்கைமான் அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் நாம்கோ நிறுவனம் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குழந்தை திருமணம், சட்ட விரோத தத்துக் கொடுப்பு உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில் வலங்கைமான் வட்டம் கோவிந்தகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட குழந்தை நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கிப் பேசினாா். சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன் குழந்தை தொழிலாளா், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்றவை குறித்து தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ஆவூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிருத்திகா, வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளா்கள் வீரபாண்டியன், ஆறுமுகம், சமூக நலத் துறை பணியாளா்கள் கிருஷ்ணம்மாள், சுசிலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா் விஜய் ஹரிஹரன், ஊராட்சி செயலா் ரமேஷ் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். வலங்கைமான் பகுதி அணி உறுப்பினா் முருகேஷ் வரவேற்றாா். சைல்டுலைன் அணி உறுப்பினா் மரகதமணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.