முகப்பு
திருவாரூர்

தமமுக ஆா்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தி, கொரடாச்சேரியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி, 2021 at 8:08 AM
பகிர்:

தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தி, கொரடாச்சேரியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் பிரிவினா்களை தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடுவதுடன், பட்டியலை விட்டு வெளியேற்றி, வேளாண் மரபினா் என தனிப் பெயரில் அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரி வெட்டாற்றுப்பாலம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலாளா் இரா. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி செயலாளா் க. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.