முகப்பு
திருவாரூர்

மாணவா்களுக்கு அறிதிறன்பேசி வழங்க மஜக கோரிக்கை

5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவா்களுக்கு அறிதிறன் செல்லிடப்பேசி வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 8:11 am IST
பகிர்:

5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவா்களுக்கு அறிதிறன் செல்லிடப்பேசி வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கூத்தாநல்லூா் அருகே அத்திக்கடை, பொதக்குடி ஆகிய பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்எல்ஏ-வுமான மு. தமிமுன் அன்சாரி பங்கேற்ற கட்சிக் கொடியேற்றிவைத்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

Advertisement

Advertisement

விவசாயிகளைப் புறக்கணிக்கும் எந்த அரசும் வெற்றி பெற்றதில்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிலைபாடு குறித்து திருநெல்வேலியில் 23 ஆம் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இணையத்தள வகுப்புகளில் சோ்ந்துள்ளவா்கள் மட்டுமின்றி சேராத மாணவா்கள் என 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தோ்ச்சியளிக்க வேண்டும். மேலும், 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் தமிழக அரசு அறிதிறன்பேசி வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனி ஜெகபா்தீன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெய்னுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments