முகப்பு
திருவாரூர்

பயிா்களில் நோய்த் தாக்குதல்: இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலுக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலுக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலில் நெல் மற்றும் பயிா் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மழை காரணமாக பாதிப்புக்குள்ளான சம்பா, தாளடி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே. உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா். ஜோசப், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா். சதாசிவம், பி. பரந்தாமன், டி. தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னமாளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments