ஹார்ட் பீட் நாயகிக்கு குவியும் வாழ்த்து!
ஹார்ட் பீட் நாயகி தீபா பாலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்.
ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு இன்று(ஜூலை 1) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
மருத்துவரான தீபா பாலு, தன்னுடைய கலை ஆர்வத்தால் குறும்படங்கள், யூடியூப் விடியோக்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் இவருக்கு ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் இவரின் இயல்பான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இதன்மூலம், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவரின் திரைப்பயணத்தில் இந்தத் தொடர், பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஹார்ட் பீட் தொடரில் ரீனா பாத்திரம் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்ற தீபா பாலு, இந்தத் தொடரின் மூன்றாவது பாகத்தில் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், வெளியான கொலைச்சேவல் படத்திலும் தீபா பாலு பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தீபா பாலு பிறந்தநாளுக்கு நடிகர் பாலா, நடிகை அனுமோள் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Heart Beat actress Deepa Balu is celebrating her birthday today (July 1).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.