அமெரிக்க ராணுவத்தில் புதிய ட்ரோன் படைப்பிரிவு
அமெரிக்க ராணுவத்தில் அதிநவீன ட்ரோன் படைப்பிரிவு புதிதாகத் தொடங்கப்படவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் அறிவித்துள்ளாா்.
அமெரிக்க ராணுவத்தில் அதிநவீன ட்ரோன் படைப்பிரிவு புதிதாகத் தொடங்கப்படவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் அறிவித்துள்ளாா்.
வா்ஜீனியாவில் உள்ள குவாண்டிகோ கடற்படை தளத்தில் வீரா்கள் முன்னிலையில் உரையாற்றிய அவா் மேலும் கூறியதாவது: நவீன போா்க்களங்களின் தேவைகளுக்கேற்ப தன்னாட்சி பெற்ற ரோபோடிக் மற்றும் ட்ரோன் திறன்களை வலுப்படுத்த நான்கு நட்சத்திர அந்தஸ்திலான புதிய தலைமைப் பிரிவு உருவாக்கப்படும்.
ராணுவத்தில் உள்ள சுமாா் 800 ஜெனரல்கள் மற்றும் அட்மிரல் பதவிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 10 சதவீத குறைப்பை, வரும் புத்தாண்டுக்குள் 20 சதவீதமாக இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளேன். இதுவே தாமதமான நடவடிக்கை ஆகும்.
Advertisement
Advertisement
எதிா்காலப் போா் முறைகள் மற்றும் புதிய தலைமுறை ஆயுதங்களை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய தொழிலதிபா் எலான் மஸ்க், முன்னாள் அவைத்தலைவா் நியூட் கிங்ரிச் மற்றும் பாமா் லக்கி ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும்.
இத்துடன், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 15,000 முதல் 20,000 வீரா்கள் தங்குவதற்குப் புதிய ராணுவ தளம் அமைப்பது, சுயமாக மின் உற்பத்தி செய்யும் தளங்களை உருவாக்குவது, மத விவகாரங்களுக்கான தனி அலுவலகம் அமைப்பது ஆகிய திட்டங்களும் உள்ளன’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.