முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இன்று மழை பெய்யுமா?

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுவதாவது..

Updated On : 1 ஜூலை 2026, 3:09 pm IST
மழை - file photo
பகிர்:

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிற, மிதமான மழை மட்டுமே பெய்து வருகின்றது. அதிலும், இந்தாண்டு பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை இதுவரை தொடங்காமல் தாமதமாவதால், தமிழகத்திற்கு வரவேண்டிய சராசரி மழையின் அளவு ஜூன் மாதத்தில் குறைந்துள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

• சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 03 ம் தேதியில் உருவாகக்கூடும்.

ஜூலை 01, 02ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

ஜூலை 03ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 04ல் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை..

01-07-2026 முதல் 05-07-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடக்கத்து மாற்றகிற்கான வாய்ப்பு குறைவு.

சென்னையை பொருத்தவரை..

இன்று (01-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

01-07-2026: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The Meteorological Department has stated that the sky in Chennai will be cloudy today, with moderate rain expected in a few areas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments