பள்ளி, கல்லூரிகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும், 2017-2018-ஆம் ஆண்டில் படித்த பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித், துணைச் செயலாளா் வீ சந்தோஷ், நகரத் தலைவா் ப. சுா்ஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.