ஊராட்சி செயலர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
உடுமலை வட்டார, சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து இடமாற்றம் செய்ததை கண்டித்து காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயம்: உடுமலை வட்டார, சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து இடமாற்றம் செய்ததை கண்டித்து காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ் நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் காங்கயம் வட்டாரத் தலைவர் ஹரிகரன் தலைமை வகித்தார்.
இதில் உடுமலை வட்டம், சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலர் மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், இடமாறுதலை வாபஸ் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
Advertisement
Advertisement
இதில் காங்கயம் வட்டார வளரச்சி அலுவலர் மூர்த்தி, மயில்சாமி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.