இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் நின்ற கப்பலிலிருந்து இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டது பற்றி...
ஓமன் கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுகொண்டிருந்த கப்பலில் இருந்து 12 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பலில் சிக்கியவர்களை மீட்டது பற்றி இந்தியத் தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “விராட் 1 என்ற பெயர் கொண்ட வர்த்தகக் கப்பல் ஓமன் கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றது. கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓமன் அதிகாரிகள் உதவியுடன் தனிக் கப்பல் மூலம் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா 3 இந்தியக் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தியத் தாக்குதலால் 3 இந்திய மாலுமிகள் பலியாகினர். இது அந்தப் பகுதியிலுள்ள இந்தியக் கப்பல்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று 14 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் நியாயமற்றது என்றும் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளார் மார்கோ ரூபியோவிடம் நேற்று தெரிவித்திருந்தார்
ரூபியோ தனது பதிவில், “அமெரிக்காவின் முற்றுகையை மீறி ஈரானிடமிருந்து சட்டவிரோதமாக எண்ணெய் கடத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Ship stranded in the Sea of Oman due to mechanical failure: 14 Indian sailors rescued!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.