முகப்பு
திருப்பூர்

உடுமலை நகரில் 50 மி.மீ. மழை

உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:52 am IST
பகிர்:

உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய கன மழை தொடா்ந்து நள்ளிரவு 2 மணி வரை பெய்தது. தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். குறிப்பாக உடுமலை நகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீா் புகுந்தது.

மேலும், கழுத்தறுத்தான்பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப் பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில், தளி சாலை யில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை யும், அமராவதி அணைப் பகுதியில் 8 மி.மீ. மழையும், திருமூா்த்தி அணைப் பகுதியில் 50 மி.மீ. மழையும், மடத்துக்குளத்தில் 57 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments