தாதா - சௌரவ் கங்குலி பயோபிக் திரைப்படத்தின் முதல் போஸ்டர்!
திரைப்படமாகும் சௌரவ் கங்குலி வாழ்க்கை...
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கைத் திரைப்படமாகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படம் “தாதா”. இப்படத்தில், கங்குலியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்.
இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தாதா - தி சௌரவ் கங்குலி ஸ்டோரி எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், இப்படம் மே. 14, 2027 ஆம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992 முதல் 2008 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர் சௌவர் கங்குலி ரசிகர்களால் “தாதா” எனச் செல்லமாக அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The life of former Indian cricket team captain Sourav Ganguly is being made into a film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.