ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்
ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக அதிக நேரம் இருப்பதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேசியது குறித்து...
ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக அதிக நேரம் இருப்பதாகவும், அதற்கு முன்பு பங்கேற்கவுள்ள மற்ற போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இன்று (அக். 5) தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு ஹர்மன்பிரீத் சின் இவ்வாறு கூறினார்.
ஜப்பானின் அய்ச்சி நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வென்றது. இதன்மூலம் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5வது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்தது.
Advertisement
Advertisement
ஆசியப் போட்டியில் வென்றதால், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இன்று தாயகம் திரும்பினர். அப்போது செய்தியாளர்களுடன் ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேசியதாவது:
''பதக்கத்துடன் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரின்போது சிறுசிறு பிழைகளைச் செய்தோம். எனினும் இறுதி நேர கோல் உண்மையாகவே சிறந்ததாக அமைந்தது. போட்டி முழுவதுமே அணி சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் பயிற்சியில் முழுமையாக கவனம் செலுத்தினோம்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக அதிக நேரம் நமக்கு இருக்கிறது. அதனை எதிர்நோக்கி இருந்தாலும், இடையே நடைபெறவுள்ள போட்டிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். அடுத்தடுத்து அதிக போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது'' என ஹர்மன்பிரீத் பேசினார்.
We have ample time before the Los Angeles Olympics Asian Games gold medal winning Indian hockey team captain Harmanpreet Singh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.