முகப்பு

இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு!

இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைந்தது குறித்து...

இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு!
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் யத்விந்தர் சிங் - எக்ஸ்
பகிர்:

இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன், யாடா சுரக்‌புரியா எனும் யத்விந்தர் சிங் இன்று (நவ. 20) பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் சுல்தான்பூர் லோதியின் சுரக்பூர் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான யத்விந்தர் சிங், உலக அரங்கில் தனது விளையாட்டு சாதனைகள் மூலம் பஞ்சாபுக்குப் பெருமை சேர்த்தவர் என முதல்வர் பகவந்த் மான் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, பஞ்சாப் முதல்வர் கூறுகையில்,

“யத்விந்தர் சிங் போன்ற விளையாட்டுத் தலைவர்கள் ஆம் ஆத்மியில் இணைவதன் மூலம் நம் மாநிலத்தில் விளையாட்டுக் கலாசாரத்தை ஊக்குவிக்கவும், இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி வைக்கவும் மேற்கொள்ளப்படும் நமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் வரும் 2027 ஆம் ஆண்டு 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian kabaddi team captain Yadvinder Singh has joined the Aam Aadmi Party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.