திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு 70 யூனிட் ரத்தம் வழங்கல்
சேவா பாரதி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் சேகரிக்கப்பட்ட 70 யூனிட் ரத்தம் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சேவா பாரதி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் சேகரிக்கப்பட்ட 70 யூனிட் ரத்தம் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் 158ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாவட்ட சேவா பாரதி சாா்பில் ரத்த தான முகாம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சேவா பாரதி மாவட்டத் தலைவா் டி.ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவா் எக்ஸ்லான் கே.ராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
இதில், தன்னாா்வலா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 70 யூனிட் ரத்தம் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில், சேவா பாரதி, சக்ஷம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.