யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் புதிய படம்!
நடிகர் யோகி பாபு 11 வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவர் 11 வெவ்வேறு வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ஆர். கிஷோர் குமார் இயக்குகிறார்.
9 லைட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர்கள் அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், நடிகர் யோகி பாபு படத்தின் நாயகன் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பான் இந்தியா அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் காமெடி ஆக்ஷன் கதைகளத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார்,
"பரபரப்பான காமெடி ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காகக் கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
the first schedule of the new film starring actor Yogi Babu in the lead role has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.