முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் நான் இருக்கிறேனா, இல்லையா; எனக்கே தெரியவில்லை: சி.வி. சண்முகம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியில் தெரிவித்ததாவது...

Updated On : 3 ஜூலை 2026, 9:18 pm IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம். - படம்: தினமணி
பகிர்:

விழுப்புரம் : அதிமுகவில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை என்றார் முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான சி.வி. சண்முகம்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் மாவட்டச் செயலர் பதவிகள் பறிக்கப்பட்டன. இதில் சி.வி.சண்முகம் தவிர மற்றவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் அந்தப் பதவிகளை ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள சி.வி. சண்முகம் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்ட நிலையில், அடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் தவெகவில் இணைவார் எனத் தகவல்கள் வெளியாகி வரும்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களாக உள்ள ஒன்றிய, நகரச் செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளீர்களா போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தவெக குறித்த கேள்விக்கு நேரடியாக அவர் பதில் கூறவில்லை. தொடர்ந்து சண்முகம் கூறியது:

இது ஆலோசனைக் கூட்டம் அல்ல. ஒருவாரம் கழித்து வெள்ளிக்கிழமைதான் இங்கு வந்தேன். எல்லோரும் வந்தார்கள், பார்த்தார்கள், அவர்களுடன் பேசினேன். நான் அதிமுகவில் இருக்கிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும். அவரிடம் நீங்கள் கேட்டு எனக்கு கூறுங்கள்.

இது தற்செயலான கூட்டம்தான். ஊரிலிருந்துநான் திண்டிவனம் வந்தால் நிர்வாகிகள் வருவார்கள். அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை நான் ஊருக்கு வந்த நிலையில் அவர்கள் வந்தார்கள், பேசினோம். கூட்டத்தில் வேறு ஏதும் இல்லை என்றார் சி.வி.சண்முகம்.

மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, தனக்குப் புதிதாக வழங்கப்பட்ட பதவியை ஏற்கமாட்டேன் என்று கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதில் கூற முடியாது என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

"I do not even know myself whether I am in the AIADMK or not," said C.V. Shanmugam, former minister and AIADMK MLA for the Mailam constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments