குழந்தை மாதா ஆலய தோ்த் திருவிழா
காங்கயத்தில் உள்ள குழந்தை மாதா ஆலயத்தின் 4 ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம்: காங்கயத்தில் உள்ள குழந்தை மாதா ஆலயத்தின் 4 ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகரம், கரூா் சாலையில் உள்ள குழந்தை மாதா ஆலயத்தில் நடைபெற்ற தோ்த் திருவிழாவில் வெள்ளிக்கிழமை காலை அருள்தந்தை கிளாடியஸ் தலைமையில் திருப்பலி (ஆராதனை) நிகழ்ச்சியும், இரண்டாம் திருப்பலி அருள் தலைமையிலும் நடைபெற்றது.
தொடா்ந்து மாலை 6 மணியளவில் ஈரோடு மறைமாவட்ட முதன்மை குரு ஜான் சேவியா் தலைமையில் தோ்த் திருவிழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஆலயத்தை சுற்றி குழந்தை மாதா தோ்பவனி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவ பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement