திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானது பற்றி..
தொடக்கப்பள்ளி, வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அமலாக்கத்துறை முன்பு ஜூன் 15 (இன்று) ஆஜரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையில் விடுக்கப்பட்ட அழைப்பாணையைத் தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி இன்று காலை 11 மணியளவில் அமலாக்கத் துறையின் சிஜிஓ வளாக அலுவலகத்தை வந்தடைந்தார்.
இதுதொடர்பாக மூத்த அமலாக்கத்துறை அதிகாரி கூறுகையில்,
Advertisement
Advertisement
விசாரணையாளர்கள் அபிஷேக் பானர்ஜியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள், மோசடி மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் வருமானத்தைக் கண்டறிய நிதி ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைக் கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்படும்.
நிதிகளை யார் கையாண்டார்கள், அவற்றின் கணக்குகள், நிறுவனங்களுக்கு இடையே எவ்வாறு பரிமாறப்பட்டன, மேலும் இந்தப் பரிவர்த்தனைகளின் மூலத்தை மறைப்பதற்காக, பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனவா என்பவை ஆராய்வோம்.
மேலும், முந்தைய சமர்ப்பிப்புகளுக்கும், சோதனைகளின்போது மீட்கப்பட்ட புதிய ஆதாரங்களுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகள் குறித்தும் விசாரணை அமைப்பு விளக்கங்களைக் கோரும்.
தடயவியல் பகுப்பாய்வின்போது சுட்டிக்காட்டப்பட்ட இடைத்தரகர்கள், பயனாளி நிறுவனங்களின் பங்கு குறித்தும் இந்த விசாரணையில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான ஆவணங்களில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையொப்பங்களைப் போலியாகப் போட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து மேற்கு வங்க சி.ஐ.டி.யால் இரண்டு கட்டங்களாக விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Trinamool Congress leader Abhishek Banerjee appeared before the Enforcement Directorate here on Monday in connection with the alleged school jobs scam case, an official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.