பல்லடத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு மாடு
பல்லடம், பனப்பாளையத்தில் மாட்டு பொங்கல் நாளன்று பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது.
பல்லடம்: பல்லடம், பனப்பாளையத்தில் மாட்டு பொங்கல் நாளன்று பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது.
பல்லடம், பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (38). இவா் விவசாயம், கால்நடை வளா்ப்பு தொழில் செய்து வருகிறாா். மாட்டு பொங்கல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து பட்டி பொங்கல் வைத்து பூஜை செய்தாா்.
அப்போது அவரது பசு மாடு, இரண்டு கன்றுக் குட்டிகளை ஈன்றது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவா், அப்பகுதியினருக்கு சா்க்கரை பொங்கல் வழங்கினாா்.
Advertisement
Advertisement