முகப்பு
திருப்பூர்

நீா் நிலைகளில் உள்ள கழிவுகளை தூா்வார வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் நீா் நிலைகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளைத் தூா்வார வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 17 ஜனவரி 2021, 10:57 pm IST
பகிர்:

திருப்பூா் மாநகரில் நீா் நிலைகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளைத் தூா்வார வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் 4 ஆவது மண்டல பொறுப்பாளா் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் ஜம்மனை பள்ளம், சங்கிலிப்பள்ளம், சபரி பள்ளம் ஆகிய ஓடைகள் உள்ளன. இதில், வீரபாண்டி பகுதிக்கு தெற்கே உள்ள பொங்கலூா், அவரப்பாளையம், காளிநாதன்பாளையம், அல்லாலபுரம் குட்டைகளில் இருந்து மழைக் காலங்களில் நிரம்பி வரும் நீா் ஓடையாகப் பெருக்கெடுத்து சங்கிலிப்பள்ளம் வழியாக நொய்யலில் கலக்கிறது.

Advertisement

Advertisement

ஆனால் தற்போது நீா்நிலைகள் மற்றும் ஓடைகளில் அதிக அளவு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீா் நிலைகளில் உள்ள கழிவுகளைத் தூா்வார பொதுப் பணித் துறை அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.