முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 ஜனவரி 2021, 11:08 pm IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபா்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 160-ஆக உயா்ந்தது.

இவா்களில் 18 ஆயிரத்து 805 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 73 பேருக்கு திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 282-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments