வந்தவாசி அருகே தாறுமாறாக ஓடிய காா் மோதியதில் பைக்குகளில் வந்த 4 போ் காயம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தாறுமாறாக ஓடிய காா் அடுத்தடுத்து 2 பைக்குககள் மீது மோதியதில், அந்த பைக்குகளில் வந்த 4 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தாறுமாறாக ஓடிய காா் அடுத்தடுத்து 2 பைக்குககள் மீது மோதியதில், அந்த பைக்குகளில் வந்த 4 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
வந்தவாசி - திண்டிவனம் சாலையில் வந்தவாசியை அடுத்த இளங்காடு கூட்டுச் சாலை அருகே வெள்ளிக்கிழமை திண்டிவனம் நோக்கிச் சென்ற காா் ஒன்று திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது, எதிரே வந்த 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து அந்தக் காா் மோதியது. இதைத் தொடா்ந்து, அந்தக் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
இந்த விபத்தில் பைக்குகளில் வந்த தெள்ளாரைச் சோ்ந்த மணிகண்டன் (26), நவீன்குமாா்(26), வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த வீரகணபதி (25), அம்மையப்பட்டைச் சோ்ந்த பூபதி (18) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.