வணிகம்

5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சாம்சங் கேலக்ஸி எஸ்11 பிப்ரவரி 2020ல் அறிமுகம்

DIN

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது அடுத்த வெர்ஷனான கேலக்ஸி எஸ்11 மற்றும் கேலக்ஸி ஃபோல்ட் 2 ஆகியவற்றை வருகிற  2020ம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

கேலக்ஸி எஸ்11 குறித்த அம்சங்கள் சமீபத்தில் ஒவ்வொன்றாக கசிந்து வருகின்றன. அந்த வகையில்  சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் மூன்று திரை அளவுகளில் கிடைக்கும். 6.7, 6.4 மற்றும் 6.2 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6.2 மற்றும் 6.4 ஆகிய  இரண்டு சிறிய வகைகளில் 5ஜி மற்றும் எல்.டி.இ(LTE), மற்றொரு வகையில் 5ஜி மட்டும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எஸ் 11 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் எக்ஸினோஸ் 990 SoC -ஆல் இயங்கும், ஆண்ட்ராய்டு 10 வசதி உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்புறத்தில் இரண்டு நவீன கேமராக்கள் உள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போனை சிறிய அளவில் மடித்துக்கொள்ளாம். 

கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்ட சாம்சங்கின் ஒன் யுஐ 2.0 இன் சமீபத்திய பதிப்பில் இயங்குகிறது.

வரவிருக்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை சுமார் $1,000. இந்திய மதிப்பில் ரூ.71,000.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT