வணிகம்

ஹோண்டா ஷைன் பைக் விற்பனையில் சாதனை

இதுவரை 90 லட்சம் ஹோண்டா ஷைன் 125 சிசி ரக பைக்குகள் விற்பனையாகி இருப்பதாக ஹோண்டோ மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம் (ஹெச்எம்எஸ்ஐ) தெரிவித்தது.

DIN


புது தில்லி: இதுவரை 90 லட்சம் ஹோண்டா ஷைன் 125 சிசி ரக பைக்குகள் விற்பனையாகி இருப்பதாக ஹோண்டோ மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம் (ஹெச்எம்எஸ்ஐ) தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநரும், தலைவருமான அத்சுஷி ஒகாடா, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஹோண்டா ஷைன் 125 சிசி ரக பைக், கடந்த 2005-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிருந்து இதுவரை, 90 லட்சம் பைக்குகள் விற்பனையாகி, வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையில், 125 சிசி ரக ஷைன் பைக்குகளில் அவ்வப்போது பல்வேறு சிறப்பம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஷைன் பைக்குகள், தற்போது பிஎஸ்-6 தொழில்நுட்பத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT